×

வெள்ளத்தால் பாதித்த சிம்லா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது: அமைச்சர் ஒன்கர் சந்த் சர்மா

சிம்லா: வெள்ளத்தால் பாதித்த சிம்லா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது என அமைச்சர் ஒன்கர் சந்த் சர்மா தெரிவித்துள்ளார். மின்சாரம், தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவைகள் சீர் செய்யப்பட்டு 4,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து கடந்த வாரம் முதல் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்லி, ஹரியானா, உத்தரகண்ட், குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.

சில தினங்களுக்கு முன் டெல்லியில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவு ஒரே நாள மழை கொட்டித் தீர்த்தது. தொடரும் கனமழையால் யமுனா, பீஸ், சட்லஜ் உள்ளிட்ட பல நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டர்.

இமாச்சல பிரதேசம், பஞ்சாப் ஆகிய நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது. இமாசலப்பிரதேசத்தில் கடந்த 1ம் தேதியில் இருந்து நேற்று வரையிலான 10 நாட்களில் மொத்தம் 24.96 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோல் தொடர்மழை காரணமாக சிம்லா உள்ளிட்ட இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது.மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியுள்ளது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதித்த சிம்லா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது என அமைச்சர் ஒன்கர் சந்த் சர்மா தெரிவித்துள்ளார். மின்சாரம், தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவைகள் சீர் செய்யப்பட்டு 4,000 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

The post வெள்ளத்தால் பாதித்த சிம்லா படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்புகிறது: அமைச்சர் ஒன்கர் சந்த் சர்மா appeared first on Dinakaran.

Tags : Shimla ,Minister ,Onkar Chant Sharma ,
× RELATED சட்டவிரோத பண பரிவர்த்தனை ஜார்க்கண்ட்...